Advertisment

மனைவி இறந்த துக்கத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு 

Husband lost their life   over wife's death

ஈரோடு மாவட்டம் பங்களா புதூர் அடுத்த மாரியம்மன் கோவில் வீதி, வேட்டுவன் புதூர், ஏளுரைச் சேர்ந்தவர் பழனியப்பன்(71). இவரது மனைவி பொட்டாயாள். இருவரும் அதே பகுதியில் தனியாக வசித்து ஆடுகளை மேய்த்து வந்தனர். இந்நிலையில் பொட்டாயாள் கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். மனைவி இறந்ததிலிருந்து பழனியப்பன் சோகத்துடன் இருந்து வந்துள்ளார். அவரது மகன் தந்தைக்கு ஆறுதல் கூறி வந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில், சம்பவத்தன்று பழனியப்பன் திடீரென வாந்தி எடுத்தார். இது குறித்து அவரது மகன் கேட்டபோது, பழனியப்பன் விஷ மருந்தை சாப்பிட்டதாகக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாகத்தந்தையை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பழனியப்பன் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த பழனியப்பன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

police Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe