husband lost their life in grief over the passed away of his wife

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே வசிக்கும் ஜெனிஷ்(25) அப்பகுதியைச் சேர்ந்த ஜெனிஷா(20) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். 11ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ஜெனிஷ் வாடகை கார் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். ஜெனிஷா திருநந்திக்கரையில் உள்ள ஒரு தையல் பயிற்சி நிலையத்தில் பயிற்சிக்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜெனிஷ் மற்றும் ஜெனிஷா இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனிடையே ஜெனிஷுக்கு குடிப்பழக்கம் அதிகமாகியுள்ளது. இதனை மனைவி ஜெனிஷா கண்டித்துள்ளார். மேலும் இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனம் உடைந்தஜெனிஷா கடந்த பிப்ரவரி மாதம் வீட்டில் விஷம் இருந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மனைவி தற்கொலை செய்து கொண்டதால் கடந்த சில நாட்களாக ஜெனிஷ் மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் தினமும் அதிகளவில் மது அருந்தி உள்ளார்.

Advertisment

இந்த நிலையில் ஜெனிஷ் கடந்த 7 ஆம் தேதி தனது வீட்டில் மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். வீட்டில் மயங்கி கிடந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன் தினம் இரவு சிகிச்சை பலனின்ரி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து உடலை மீட்டு பிரேத பறிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் ஜெனிஷ் உயிரிழந்தது குறித்தும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவி இறந்த துக்கத்தில், உயிரை மாய்த்துக் கொண்ட கணவனின் செயல் குலசேகரப்பட்டினம்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.