Advertisment

மனைவி இறந்ததால் மனவேதனை; கணவன் எடுத்த விபரீத முடிவு

husband lost their life in the grief of his wife passed away

ஈரோடு சூளை பகுதியைசேர்ந்தவர் சச்சிதானந்தம்(68). தறிப்பட்டறை தொழிலாளி. இவருடைய மனைவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன்பிறகு சச்சிதானந்தம் மனவேதனையுடன் காணப்பட்டார். மேலும் உடல் நலக்குறைவால் அவர் அவதிப்பட்டு வந்தார்.

Advertisment

இந்தநிலையில், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது சச்சிதானந்தம் தூக்குப்போட்டு கொண்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சச்சிதானந்தம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

police Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe