ஈரோடு மாவட்டம்சென்னிமலைகே. ஜி.வலசு பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுன் ரஞ்சித் (30).டூரிஸ்ட்ஒருங்கிணைப்பாளராக வேலை பார்த்து வந்தார். அரச்சலூர் அடுத்த இரட்டைசுற்றிபாளையத்தைசேர்த்தஅலமேலுஎன்பவரைக்காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து ஏற்பாடு காரணமாக அலமேலுகணவரிடம் கோபித்துக் கொண்டு காங்கேயத்தில் உள்ளஉறவினர்களுக்குச்சென்று விட்டார். இதனால் அர்ஜுன் ரஞ்சித் மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அர்ஜுன் ரஞ்சித் மட்டும்வீட்டில் இருந்துள்ளார். மற்றவர்கள் கோவில்திருவிழாவுக்காகச்சென்று விட்டனர். அப்போது திடீரென அர்ஜுன் ரஞ்சித் வீட்டில்தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்துசென்னிமலைபோலீசாருக்குதகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடலை மீட்டுபிரேதப்பரிசோதனைக்காகப்பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள மருத்துவமனைக்குபோலீசார்அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்துவழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.