Advertisment

மனைவிக்கு வந்த வீடியோ கால்; கண்முன்னே காத்திருந்த பேரதிர்ச்சி - கோவையில் பரபரப்பு!

Husband lost their  by video calling his wife in Coimbatore

கோவை பீளமேடு அருகே வசித்துவருபவர்கள் ஆனந்த(29) - ரம்யா(25) தம்பதியினர். ஆனந்த ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் ஆனந்திற்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

Advertisment

அந்த வகையில் நேற்று முன்தினம்(6.10.2024) வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த ஆனந்த்,மனைவி ரம்யாவிடம் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ரம்யா, கணவனிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் மன வேதனையடைந்த ஆனந்த சில மணிநேரம் கழித்து மனைவி ரம்யாவிற்கு வீடியோ கால் செய்துள்ளார்.

Advertisment

அதனை ரம்யா எடுத்தபோது, ஆனந்த் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மனைவி கண்முன்னே வீடியோ காலில் கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Coimbatore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe