Advertisment

மதுவில் மாத்திரை கலந்து விவசாயி கொலை: ரஞ்சிதா காதலனுடன் கைது

tablet

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தகரையை சேர்ந்தவர் மணிகண்டன் வெள்ளிக்கிழமை தனது நிலத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மணிகண்டனுக்கு 26 வயதான ரஞ்சிதா என்ற மனைவியும், 9 வயதில் தனுஷ் என்ற மகனும், 3 வயதில் ஆர்த்தி என்ற மகளும் உள்ளனர்.

Advertisment

தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது ரஞ்சிதா முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

Advertisment

போலீசார் விசாரணையில், மணிகண்டன் தனது நிலத்தை ஆறுமுகம் என்பவருக்கு குத்தகைக்கு விட்டிருந்தார். இதனால் ஆறுமுகத்துக்கும், மணிகண்டனின் மனைவி ரஞ்சிதாவும் அடிக்கடி சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இந்த சந்திப்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இவர்களது கள்ளக்காதல் விவகாரம் மணிகண்டனுக்கு தெரியவந்ததும் அவர் தனது மனைவியை கண்டித்தார். ஆறுமுகத்திடம் குத்தகைக்கு விட்டிருந்த நிலத்தையும் மீட்டார். இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து மணிகண்டன் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் ஆறுமுகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஜாமீனில் வெளியே வந்த பின்னரும் ஆறுமுகத்துக்கும், ரஞ்சிதாவுக்கும் இடையே உள்ள தொடர்பு தொடர்ந்தது. மணிகண்டன், மனைவியை மீண்டும் கண்டித்ததார். ஆறுமுகத்தை பிரிய மனமில்லாத ரஞ்சிதா, கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். ஆறுமுகத்துடன் ஆலோசனை மேற்கொண்டார்.

tablet

அதன்படி வியாழக்கிழமை இரவு வீட்டில் மணிகண்டனுக்கு ரஞ்சிதா மதுவில் அதிக தூக்க மாத்திரைகளை கலந்துகொடுத்தார். மணிகண்டன் அந்த மதுவை அருந்திய சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். பின்னர் தனது கள்ளக்காதலன் ஆறுமுகம், 18 வயது சிறுவன் ஆகியோரை வரவழைத்து, அவர்களுடன் சேர்ந்து தலையணையால் அமுக்கி மணிகண்டனை கொலை செய்தார். உடலை அவரது நிலத்தில் வைத்துவிட்டு வந்தது தெரிந்தது.

இதையடுத்து ரஞ்சிதா, கள்ளக்காதலன் ஆறுமுகம் மற்றும் 18 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். மணிகண்டன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், கைதான 3 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

arrested boyfriend Farmer killed tablet wife
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe