/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/59_53.jpg)
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ்(53). இவரது இரண்டாவது மனைவி தீபா(35). இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதேசமயம் தீபாவின் நடத்தையில் ரமேஷுக்கு சந்தேகம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு பாவுசா நகரில் உள்ள ரமேஷின் தங்கை வரலட்சுமியின் வீட்டிற்கு தூங்குவதற்காக தீபா சென்றுள்ளார். அப்போது ரமேஷூக்கும் தீபாவிற்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையேயான தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ரமேஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தீபாவின் உடலில் சரமாரியாக குத்தி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.
இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்(பொறுப்பு) சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட ரமேஷை போலீசார் கைது செய்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)