நடத்தையில் சந்தேகம்; கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம் - விசாரணையில் பகீர்! 

Husband incident wife over suspicion of her behavior

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் முகத்துப்பாண்டியன்(38) - முத்துக்குமாரி(28) தம்பதியினர். 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். முகத்துப்பாண்டியன் யூனியன் அலுவலகத்தில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்துவருகிறார். இதனிடையே மனைவி முத்துக்குமாரிக்கு வேறு ஒரு இளைஞருடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த 4 நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிடித்து அந்த இளைஞருடன் முத்துக்குமாரி சென்றுவிட்டார்.

இதனைத் தொடர்ந்து 4 மாதங்களுக்கு பின்பு மீண்டும் சங்கரன்கோவில் வந்த முத்துக்குமாரி, கணவர் முகத்துப்பாண்டியனுடன் சேர்ந்து வாழ்ந்துவந்தார். ஆனால், கணவன் மனைவி இடையே இது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இந்த நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு முத்துக்குமாரி தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதையடுத்து தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதாக முகத்துப்பாண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முத்துக்குமாரியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் முத்துக்குமாரி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து கணவர் முகத்துப்பாண்டியன் பிடித்து போலீசார் விசாரித்ததில், முத்துக்குமாரியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் தகராறு செய்தபோது, கழுத்தைப் பிடித்து நெரித்தேன் கொலை செய்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், அவரது உடலை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று நாடகமாடியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். அதன்பின்னர் முகத்துப்பாண்டியை போலீசார் கைது செய்தனர்.

Husband and wife police
இதையும் படியுங்கள்
Subscribe