ad

ஆண் நண்பருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததால்மனைவியை திட்டம் போட்டு கொலை செய்த சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

குமாி மாவட்டம் அழகியமண்டபம் தச்சன்கோடு பகுதியை சோ்ந்தவா் எபினேசா். 35 வயதான இவர்டெம்போ டிரைவராக இருக்கிறார். எபினேசரும்மூலச்சலை சோ்ந்த ஜெபபிாின்ஷா என்பவரும்கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டில்ஓமன் நாட்டுக்கு கிரேன் ஆபரேட்டா் வேலைக்கு சென்ற எபினேசா், அங்கு 7 ஆண்டுகள் வேலை செய்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினார். அதன்பிறகு, சொந்தமாக வீடு கட்டுவதற்காக இடத்தை வாங்கிய கையோடு டெம்போ ஒன்றையும் வாங்கிஓட்டி வந்தாா்.

Advertisment

இந்நிலையில், காதல் திருமணம், குழந்தைகள் எனக்காலங்கள் ஓடியதால், அந்த வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக இருவருக்கும் சலிப்பை ஏற்படுத்தியதாக தொிகிறது. இதனால், எபினேசரிடம் சண்டை போடும் ஜெபபிாின்ஷா, அடிக்கடி கோபப்பட்டு அம்மா வீட்டிற்கு செல்வதும், அதன் பிறகு சில நாட்கள் கழித்து வருவதும் வழக்கமானஒன்றாக மாறியுள்ளது.

இதேபோல், கடந்த மூன்று மாதங்களுக்கு முன், கணவாிடம் சண்டை போட்டுக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற ஜெபபிாின்ஷா, அதோடு கணவர் வீட்டிற்கு வரவில்லை. குழந்தைகளும் அம்மா அப்பாவிடம் மாறி மாறி தங்கி வந்தனா். இந்த சமயத்தில் தான் ஜெபபிாின்ஷா திருவனந்தபுரத்தில் பியூட்டிஷியன் கோர்ஸ் படிக்க சோ்ந்துள்ளாா். அதன் பிறகு, ஜெபபிாின்ஷாவின் நடவடிக்கையிலும்பேச்சிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. சேலையை மட்டுமே விரும்பி அணியும் ஜெபபிாின்ஷா, நாளடைவில் ஜீன்ஸ் பேண்ட், டீ-ஷர்ட்எனத்தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி, எப்பொழுதும் கையில் செல்ஃபோனே கதி என இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

Advertisment

இதைக் கவனித்த எபினேசர், மனைவியுடன் கடுமையாக தகராறு செய்துள்ளார். இதை சிறிதளவும் கண்டுகொள்ளாத ஜெபபிாின்ஷா, இனிமேல் இந்த மாதிரி டிரஸ்-தான் போடுவேன் என பதிலடி கொடுத்துள்ளார். இது எபினேசருக்கு கடும் எரிச்சலை கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, ஜெபபிாின்ஷாவிற்கும் அவரது ஆண் நண்பருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், கடும் கோபத்திற்குள்ளான எபினேசர், ஜெபபிாின்ஷாவை கொலை செய்ய திட்டமிட்டார்.

இதையடுத்து, ஜெபபிாின்ஷாவிடம் அன்பாக பேசிய எபினேசர், அவரை ஒரு நாள் மட்டும் வீட்டுக்கு வா என்று அழைத்துள்ளார். அப்போது, இவர்கள் மூலச்சல் ஆற்றங்கரை வழியாக பைக்கில் செல்லும் போது, எபினேசர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, ஜெபபிாின்ஷாவை சரமாரியாக வெட்டிச் சாய்த்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், தன்னுடைய தோட்டத்திற்கு சென்ற எபினேசர் போலீசுக்கு பயந்துதற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போதுசம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போலீசார்எபினேசரை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இதையடுத்து2 நாட்கள் கழித்து எபினேசரை கைது செய்த போலீசார்அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதன்னுடைய மனைவி திருமணத்தை மீறியஉறவில் இருந்ததால் கொலை செய்தேன் என போலீசில் வாக்குமூலம் அளித்தார். டீ-ஷர்ட் போடுவதில் ஆரம்பித்த பிரச்சனை கொலையில் முடிந்துள்ள சம்பவம்குமரி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.