husband incident his wife for his girlfriend

Advertisment

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார்(33) - பிரவீனா(24) தம்பதியினர்.ராஜ்குமார் அப்பகுதியில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் ஷிப்ட் முறையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 22 ஆம் தேதி ராஜ்குமார் தனது மனைவி பிரவீனாவை அவரது சித்தப்பா மகள் கீர்த்தனா வீட்டில் விட்டுவிட்டு, வேலைக்குச் சென்று மாலை திரும்பி வரும்போது அழைத்து வருவதாகக் கூறி பிரவீனாவை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது எளம்பலூர் தேசிய நெடுஞ்சாலை நோக்கி இருவரும் சென்றுகொண்டிருந்த போது திடீரெனவழி மறித்த கும்பல் ஒன்று பிரவீனாவை சரமாரியாக அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தது. அதேசமயம் ராஜ்குமாருக்கு கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், பிரவீனாவிற்கும்ராஜ்குமாருக்கும் குடும்ப பிரச்சனைகாரணமாக அடிக்கடி தகராறு நடந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணையை கணவர் ராஜ்குமார் பக்கம் திருப்பினர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மனைவி பிரவீனாவை கூலிப்படை வைத்துக் கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், ராஜ்குமாருக்கு பெரம்பலூர் அருகே உள்ள கிராமத்தில் இருக்கும் ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இது பிரவீனாவிற்குத்தெரியவர அடிக்கடி ராஜ்குமாரிடம் இது குறித்து கேட்டதாகக் கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து அடிக்கடி ராஜ்குமாருக்கும்பிரவீனாவுக்கும் பிரச்சனை வந்ததால், ராஜ்குமார் திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்அவரை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பெண் தன்னை விட்டுப் பிரிந்து சென்றதற்கு மனைவி பிரவீனாதான் காரணம் என்று முடிவு செய்த ராஜ்குமார், அவரைப் பழிவாங்கத்திட்டமிட்டு, கூலிப்படையிடம் பணம் கொடுத்து கொலை செய்துள்ளார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு சந்தேகம் வராமல் இருக்க தனது கையை வெட்டிக் கொண்டு ராஜ்குமார் நாடகமாடியுள்ளார். மேலும் பிரவீனாவை வழிமறித்து கொலை செய்த கூலிப்படை 5 பேரையும் போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.