husband incident his wife by drowning her in the ocean waves

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை அடுத்த சாமியார் பேட்டை கடற்கரையில் கடந்த ஆண்டுமே 15 ஆம் தேதி கடலூர் அருகே உள்ள பச்சாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமநாதன்(35). இவரது மனைவி கிருத்திகா(33). இருவரும், இவர்களது உறவினர்களுடன் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவரது மனைவி கடல் அலையில் சிக்கி உயிரிழந்ததாக ராமநாதன் தூக்கிச் சென்றுள்ளார்.

Advertisment

அப்போது அங்கிருந்த காவல்துறையினர் இதனைப் பார்த்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதற்கு அவர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்ததாகக் கூறியுள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் உடனடியாக அவரது மனைவி உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Advertisment

இந்த விசாரணையில் ராமநாதன் முன்னுக்குப் பின் முரணான தகவலைக் கூறியுள்ளார். மேலும் உடற்கூறு ஆய்வு தகவலும் வலுக்கட்டாயமாகத்தண்ணீரில் அழுத்திக்கொலை செய்ததாகத்தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு முகத்தில் காலை வைத்து அழுத்திக் கொன்றதாக ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் புதுச்சத்திரம் காவல்துறையால் கைது செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு சிறைக்கு அனுப்பப்பட்டார். கடல் அலையில் மனைவியை அழுத்திக் கொலை செய்துவிட்டு நாடகம் ஆடிய கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுச்சத்திரம் பரங்கிப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.