/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/20_108.jpg)
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடியான லூவியரசன்(34). இவருடைய மனைவி அவரது உறவினர் அருண்குமார் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த லூவியரசன் நேற்று(6.5.2024) இரவு 1 மணி அளவில் காவேரிப்பாக்கம் அடுத்த ஆலப்பாக்கம் பகுதிக்கு அருண்குமாரை அழைத்துச் சென்று துணியால் கழுத்தை இறுக்கியும் பிறப்புறுப்பில் கத்தியால் கிழித்தும் கொலை படுகொலை செய்துள்ளார்.
இதனையடுத்து கொலை செய்துவிட்டு தானே காவேரிப்பக்கம் காவல் நிலையத்திற்கு சென்று கொலை செய்ததாக போலீசாரிடம் கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேதத்தைக் கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி லூவியரசன் மீது காஞ்சிபுரம் மற்றும் பாணவரம் உள்ளிட்ட காவல்நிலையங்களில் 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த இளைஞரை கணவரே படுகொலை செய்த சம்பவம் அந்த பகுதியினர் மத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)