செக்யூரிட்டி என கணவனை கேலி செய்த மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி சில தினங்களுக்கு முன்பு வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்த நிலையில் போலீசார் அதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். கணவர் தாக்கியதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்த நிலையில் கணவர் ராஜசேகரை அவரது செல்போன் சிக்னலை வைத்து போலீசார்தேடி வந்தனர்.
அதனடிப்படையில் திருவள்ளூரில் கைது செய்யப்பட்ட ராஜசேகரிடம் விசாரணை நடைபெற்றது. அதில் குறைவான சம்பளம் வாங்கும் தன்னை செக்யூரிட்டி செக்யூரிட்டி என மனைவி கேலி செய்ததால் மதுபோதையில் இருந்த நான் கோபத்தில் கல்லை எடுத்து மனைவியின் தலையில் அடித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார் கணவர் ராஜசேகர்.