/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/993_25.jpg)
கிருஷ்ணகிரி அருகே உள்ள பெத்ததாளாப்பள்ளியை சேர்ந்தவர்கள் சேதுராம்-சுகன்யா தம்பதியினர். இருவரும் ஆடிட்டராக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக சுகன்யா, தனது கணவரை பிரிந்து கிருஷ்ணகிரி வீரப்பன் நகர் பகுதியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் கடந்த 10 மாதங்களாக வசித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இருவரும் விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பான வழக்குகள் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள பழைய பேட்டை காந்தி சிலை அருகிலும், இன்னபிற பகுதியிலும் சுகன்யா இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுகன்யா, முன்விரோதம் காரணமாக, தான் இறந்துவிட்டதாக கணவர் சேதுராம் பேனர் வைத்துள்ளதாக கூறி கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)