Advertisment

பொள்ளாச்சியில் மீண்டும்அதிர்ச்சி சம்பவம்! ஆபாசமாக நண்பனின் மனைவியை படம் எடுத்த நபருக்கு நடந்த கதி!

கடந்த சில மாதங்களுக்கு பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அந்தப் பதற வைக்கும் வீடியோவில், "அண்ணா என்னை அடிக்காதீங்கண்ணா டிரெஸ்ஸை கழட்டிடுறேன்'' என ரிஷ்வந்த்தின் பெல்ட் அடி தாங்காமல் கதறியபடியே துடித்த ஒரு பெண்ணின் குரல் தமிழகத்தையே உலுக்கியது.அதன் பின்பு தொடர்ந்து பொள்ளாச்சியில் பள்ளியில் சம்மந்தமான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisment

pollachi issues

இந்த நிலையில் நண்பனின் மனைவியை ஆபாசமாக புகைப்படமெடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த காமக்கொடூரனை காவல்துறையினர் கைது செய்திருக்கும் சம்பவமானது பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி மாவட்டத்தில் நெகமம் எனும் பகுதி அமைந்துள்ளது. இதனருகே உள்ள ஆவலன்பட்டி என்ற இடத்திற்குட்பட்ட அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (42). இவர் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சிதா(38) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான மணிகண்டன் சுப்பிரமணியத்தின் நண்பரானார். சில நாட்களுக்கு முன்பு சுப்பிரமணியன் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். சுப்பிரமணியன் வேலைக்கு சென்றவுடன் அவரது நண்பரான மணிகண்டன் ரஞ்சிதாவை பார்க்க வந்துள்ளார். அப்போது ரஞ்சிதாவிடம் அவருடைய அந்தரங்க புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாக காட்டி மிரட்டியுள்ளார். மேலும் தன்னுடன் ஆசைக்கு ஒத்துழைக்காவிட்டால் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

Advertisment

மணிகண்டனின் தகாத செயல்களை அவருடைய மனைவியிடம் ரஞ்சிதா கூறியுள்ளார். ஆனால் சந்தியா மணிகண்டனை கண்டிக்காமல் அவரை ஆதரித்து வந்துள்ளார்‌. பின்னர் செய்வதறியாது தன் கணவர் சுப்பிரமணியிடம் நிகழ்ந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். பின்னர் இருவரும் நெகமம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாகியுள்ள சந்தியாவை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது பொள்ளாச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியில் சமீப காலமாக பாலியல் குற்றங்கள் அதிகம் நடந்து வருவது அப்பகுதி மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

police station wife husband issues pollachi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe