Husband of a female councilor who came home with a chair!

Advertisment

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் தேர்வுநிலை பேரூராட்சியின் கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு பெண் கவுன்சிலர் ஒருவரின் கணவர் நாற்காலியுடன் வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு கவுன்சிலர்கள் கூட்டங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் நிர்வாக செயல்பாடுகள் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கடலூர் பெண்ணாடம் பேரூராட்சியில் கடந்த மாதம் நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் பார்வையாளர்களுக்கு இடம் கொடுக்கவில்லையாம். அவர்களுக்கு அமர நாற்காலியும் ஏற்பாடு செய்யப்படவில்லையாம். இப்படிப்பட்ட நிலையில் பெண்ணாடம் ஐந்தாவது வார்டின் கவுன்சிலர் செல்வியின் கணவர் அய்யப்பன் வீட்டிலிருந்தே பிளாஸ்டிக் நாற்காலிகள் இரண்டை எடுத்து தலையில் வைத்துக்கொண்டு வந்து கூட்டம் நடைபெற்ற அறையின் வெளியே போட்டு அமர்ந்தார். அவர் பேரூராட்சி அலுவலகத்திற்கு நாற்காலிகளைத் தலையில் சுமந்து கொண்டு வரும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளது.