Husband complains to police that his wife and child have been kidnapped...

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே வசித்துவருபவர் ரவிக்குமார், வயது 34. இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். ரவிக்குமார் ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கலக்ஷன் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். தினசரி வேலைக்குச் சென்றுவிட்டு இரவில்தான் வீடு திரும்புவார்.

Advertisment

அதுபோல், நேற்று முன்தினம் வேலை முடித்துவிட்டு, இரவு வீட்டுக்குத் திரும்பினார் ரவிக்குமார். வீட்டில் அவரது மனைவி மற்றும் 5 வயது மகன் ஆகிய இருவரையும் காணவில்லை. பல்வேறு இடங்களில் அவர்களைத் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த ரவிக்குமார் சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisment

அவரது புகாரில் என் மனைவியும் எனது ஐந்து வயது மகனையும் காணவில்லை, உற்றார் உறவினர் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களிலும் தேடி பார்த்துவிட்டேன் கிடைக்கவில்லை. எங்கள் ஊரைச் சேர்ந்த பரமசிவன் மகன் மணிகண்டன் (26) என்பவருடன் அடிக்கடி என் மனைவி பேசி வந்துள்ளார். நானும் எனது உறவினர்களும் பலமுறை கண்டித்தும் அவர் பேசிவந்தார்.

இந்த நிலையில்தான் எனது மனைவியையும் மகனையும் காணவில்லை. எனவே மணிகண்டன் என் மனைவியையும் மகனையும் கடத்திச் சென்றிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

ரவிக்குமாரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சின்னசேலம் போலீசார் மணிகண்டன், ரவிகுமாரின் மனைவி, அவரது ஐந்து வயது மகன் ஆகிய மூவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இளம்பெண்ணும் அவரது 5 வயது மகனும் காணாமல்போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.