Advertisment

குடித்த மோரில் விஷம்... வேற கல்யாணத்துக்கு போட்ட திட்டம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

ஆந்திராவில் தனது மனைவி கொடுத்த மோரில் விஷம் கலந்து கொடுத்ததாகக் கூறி நாடகமாடிய கணவன் சிக்கியுள்ளார். ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் ஜோனகிரி கிராமத்தை சேர்ந்தவர் லிங்கையா. இவருக்கு திருமணமாகி பத்து நாட்களே ஆகியுள்ளது. இதனைத் தொடர்ந்து புதுமணத்தம்பதி இருவரும் மணப்பெண் வீட்டிற்கு சென்றனர். மூன்று நாட்களுக்கு முன்னர் மணமக்களுக்கு பெண் வீட்டில் விருந்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு நாகமணி அவருக்கு இரவில் பால் கொடுத்துள்ளார். பாலைக்குடித்த சிறிது நேரத்தில் வயிற்று வலியால் லிங்கையா துடிக்க, அவரை அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது லிங்கையா திடீரென மயங்கி விழுந்துள்ளார். அப்போது தனது மனைவி நாகமணி தனக்கு விஷம் கலந்த மோரை கொடுத்துவிட்டதாக கூறியுள்ளார்.

Advertisment

incident

திருமணமான 10 நாளில் மனைவி கணவரைக் கொல்ல மனைவி விஷம் கொடுத்துள்ளார் என்ற செய்தி அந்த ஊர் முழுவதும் பரவியது. இதுகுறித்து காவல் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. காவல் துறையினர் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தத் தொடங்கினர். இது சம்மந்தமாக அவர் மனைவியிடம் நடத்திய விசாரணையில் தன் கணவருக்கு பால்தான் கொடுத்ததாக சொல்லி அந்த டம்ளரையும் காட்டியுள்ளார்.

Advertisment

இந்தநிலையில் சிகிச்சைக்குப்பின் லிங்கையாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமணத்திற்கு முன் லிங்கையா வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரின் வீட்டில் அதற்கு சம்மதம் தெரிவிக்காமல் நாகமணியை திருமணம் செய்து வைத்துவிட்டனர். இதனால் விஷம் அருந்தியது போல நாடகமாடிய லிங்கையா மருத்துவமனைக்கு செல்லும் முன் தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்து அருந்தி இருக்கிறார் என்ற தகவல் விசாரணையில் வெளிவந்துள்ளது. மேலும் காதலித்த பெண்ணை திருமணம் செய்யவே மனைவி மேல் கொலைப்பழி சுமத்த தானே விஷத்தைக் குடித்து இப்படி நாடகம் ஆடியதாக ஒத்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் போலிஸாரையும் நாகமணி வீட்டாரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

complaint husband incident Investigation police wife
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe