Advertisment

மனைவி விரித்த இன்ஸ்டாகிராம் வலையில் சிக்கிய கணவன்!

Husband caught in wife-spread Instagram web!

வெளிநாட்டில் இருந்து கொண்டு, தமிழ்நாட்டில் பாலியல் தொழில் செய்து வந்த கணவரை மனைவியே காவல் நிலையத்தில் பிடித்துக் கொடுத்துள்ளார்.

Advertisment

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அருண் ஜோஷி என்பவர், பஹ்ரைன் நாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், அவரது கணினியில் பல பெண்களின் ஆபாசப் புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்ததையும் அவற்றைக் கொண்டு தமிழகத்தில் பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தி வந்ததையும்மனைவிகண்டுபிடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் வேறொரு பெண் போல போலி கணக்கைத் தொடங்கி தான் பெரிய தொழிலதிபரின் மகள் என்றும், தன்னை காண சென்னைக்கு வருமாறும் கணவனை அழைத்த அவர், விமான டிக்கெட்டையும் புக் செய்துள்ளார்.

Advertisment

திருவான்மியூர் சொகுசு விடுதியில் அறை எடுத்திருப்பதாகக் கூறியதை நம்பி, அங்கு சென்ற அருண் ஜோஷியை காவல்துறையினர் கையும், களவுமாக கைது செய்தனர். அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு கைப்பேசிகளில் இருந்து ஆபாச உரையாடல், புகைப்படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன.

instagram police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe