
கோவையில் விவகாரத்து வழக்கு ஒன்றில் மனைவிக்கு ஜீவனாம்சம் தருவதற்காக 20 சாக்கு மூட்டைகளில் சில்லறைக் காசுகளை நீதிமன்றத்திற்கு எடுத்த வந்த கணவரின் செயலை பார்த்து நீதிமன்றமே அதிர்ச்சியடைந்துள்ளது.
கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த தம்பதி குடும்ப பிரச்சனை தொடர்பாக தங்களுக்கு விவகாரத்து கேட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், மனைவி சார்பில் இடைக்கால ஜீவனாம்சம் வேண்டும் என்று அதே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனைவிக்கு ரூ.2 லட்சம் ஜீவனாம்சம் தரவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி, கணவர் முதற்கட்டமாக ரூ. 80000 தொகையை நோட்டாக கொடுக்காமல் 20 பைகளில் ரூ.1, ரூ,2, ரூ.5 நாணயங்களாக நீதிமன்றத்திற்கு கொண்டு வந்துள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதி, இப்படி நாணயங்களாக கொடுக்கக் கூடாது; இதை எடுத்துச் சென்று நோட்டாக மாற்றி ரூ. 80 ஆயிரத்தை கொடுங்கள் என்றார். அதன்பின் 20 மூட்டைகளையும் எடுத்துச் சென்று நோட்டாக மாற்றிக் கொடுத்துள்ளார்.
மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுப்பதற்காக 20 பைகளில் நாணயங்களை கொண்டுவந்த கணவரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.