/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/5_210.jpg)
கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கிலிகானப்பள்ளியை சேர்ந்த ரஜினி கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு சுவர்ணா என்ற மனைவியும் சூர்யா என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று ரஜினி தனது மனைவியிடம் முட்டை மசாலா கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் இந்த தகராறு முற்றி இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ரஜினி தனது மனைவி சுவர்ணாத்தை அடித்துத் தாக்கியுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மகன் சூர்யா தனது தாயை அடிக்க வேண்டாம் என்று கூறி ரஜினியை தடுத்துள்ளார். இதனால் மேலும் கோபமடைந்த ரஜினி மகன் என்று கூட பார்க்காமல் சூர்யாவையும் தாக்கியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே மூச்சுத் திணறல் ஏற்பட்டு சூர்யா மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சுவர்ணா தனது மகனை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மகன் சூர்யா மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தியதாக சுவர்ணா ரஜினி மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ரஜினியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)