Advertisment

பிரிந்து சென்ற மனைவி; ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட கணவர்!

Husband attempts lost life due to separation from wife

Advertisment

சேலம் மாவட்டம் குள்ளகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகன். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். முருகன் மூட்டை தூக்கும் வேலை செய்து வந்துள்ளார். இதனிடையே முருகனுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக முருகனை பிரிந்து அவரது மனைவி சூரமங்கலத்தில் உள்ள தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். கூடவே இரு மகன்களையும் அவருடன் வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, முருகனுக்கு சற்று மன நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மனைவி பிரிந்துச்சென்றதால் சம்பவத்தன்று முருகன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது ஆண் உறுப்பை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது வலியால் அலறி துடித்த அவரின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

police Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe