Advertisment

''உன் அப்பாவே பைக்க தரணும்''-கர்ப்பிணி மனைவி பேருந்தில் இருந்து கீழே தள்ளி கொலை- கணவன் கைது

Husband Arrested for Pushing Pregnant Wife from Bus in Fury

திண்டுக்கல்லில் குடிபோதையில் இளைஞர் ஒருவர் கர்ப்பிணி மனைவியை ஓடும் பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

திண்டுக்கல் மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன். இவர் தன்னுடைய மாமனாரிடம் இருசக்கர வாகனத்தை கேட்டு வாங்குவதற்காக தன்னுடைய ஐந்து மாத கர்ப்பிணி மனைவியுடன் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது 'நான் உன் தந்தையிடம் இருசக்கர வாகனத்தை கேட்க மாட்டேன். நீ தான் கேட்க வேண்டும். அவரே பேருந்து நிலையத்திற்கு வந்து இருசக்கர வாகனத்தை என்னிடம் தர வேண்டும்' என கூறியுள்ளார்.

Advertisment

பாண்டியன் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஓடும் பேருந்திலேயே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பாண்டியன் கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் இருந்து கீழே தள்ளியுள்ளார். இதில் கீழே விழுந்த கர்ப்பிணி பெண் காயமடைந்த நிலையில் அவர் உயிரிழந்தார். தொடர்ந்துபாண்டியன் என்ற அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இருசக்கர வாகனம் இரவல் கேட்கும் விவகாரத்தில் கர்ப்பிணி பெண் பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

bus police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe