மனைவியை கொலை செய்து தற்கொலை என நடித்த கணவன் கைது!

திருச்சி மதுரை ரோட்டில் உள்ள எடமலைப்பட்டிபுதூரில் ஸ்ரீனிவாசன் தெருவை சேர்ந்தவர் இளையராஜா, கார் டிரைவர், இவருடைய மனைவி மணிமேகலை, இவர்களுக்கு திருமணமாகி 10 வருடம் ஆகிறது. 9 வயதில் மனோ என்கிற மகன் இருக்கிறார். இந்த நிலையில் கடந்த 17ம் தேதி மணிமேகலை வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டதாக எடமலைபபட்டி புதூர் காவல்நிலையத்திற்கு தகவல் வந்தது. உடனே சம்பவ இடத்திற்கு சென்று மணிமேகலையில் உடலை கைப்பற்றி போலீசார்உடற் பரிசோதனை செய்தனர். இதன் பிறகு அவர்கள் உறவினர்களிடம் உடல்ஒப்படைக்கப்பட்டது.

Husband arrested for killing wife

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

போலிஸ் நடத்திய முதல்கட்ட விசாரணையில் மணிமேகலை பலரிடம் கடன் வாங்கியிருப்பதாகவும், அதனால் மனம்வெறுத்து தற்கொலை செய்து கொண்டார் என்று இளையராஜா போலிசில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

ஆனாலும் எடமலைப்பட்டிபுதூர் இன்ஸ்பெக்டர்முருகவேலுக்கு இளையராஜ பேசியதில் சந்தேகம் ஏற்படஅக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரிக்க ஆரம்பித்தார். அவருடைய விசாரணையில் ஒரு கார் வாங்கியதில் ஏற்பட்ட பிரச்சனையில் கொலை நடந்திருக்கிறது என்று தெரிந்ததும் அதிர்ச்சியாகி இளையராஜாவை எதுவும் தெரியாதது போல் விசாரணைக்கு அழைத்தார்.

அப்போது போலிஸ் தங்களின் பாணியில் விசாரித்தில் இளையராஜா கொடுத்த வாக்குமூலம்,

நான் கார் டிரைவராக வேலை செய்கிறேன். ஒரு வாரம் வேலைக்கு செல்வேன். பிறகு ஒரு வாரம் வேலைக்கு செல்ல மாட்டேன். இதை உணர்ந்த என் மனைவி எனக்கு கார் வாங்கி தரபல இடங்களில் கடன் வாங்கினார்.

கார் வாங்கிய பிறகும் நான் வேலை சென்று கடனை அடைக்கவில்லை. இதனால் வங்கியிலிருந்து காரை ரெக்கவரி பண்ணி எடுத்து சென்று விட்டனர். பிறகு வீட்டிலே .இருந்தேன். இதன் பிறகும் என் மனைவி கடன் வாங்கினார். பிரச்சனை அன்று என் வீட்டிற்கு கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு வீட்டிற்கு வந்தவர்கள் என்னிடம் சண்டை போட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்து எனக்கும் மணிமேகலைக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபத்தில் அவளை ஓங்கி அறைந்தேன். அப்படியே சுருண்டு விழுந்தாள். அப்போதும் கோபம் தனியாத நான் அவளின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தேன்.

அதன் பிறகு எப்படி இதை தற்கொலையாக்குவது என்று யோசித்து கழுத்தில் கயிற்றை மாட்டி மின் விசிறியில் தொங்க விட்டு மணிமேகலை தற்கொலை செய்தாக நாடகமாடினேன். அதன் பிறகு எனக்கு குற்ற உணர்வு என்னை குத்திக்கொண்டே வந்தது. என்று வாக்குமூலம் கொடுத்தார். இதன் தற்கொலை வழக்கை கொலைவழக்காக மாற்றி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

murder police
இதையும் படியுங்கள்
Subscribe