Husband arrested for incident wife

Advertisment

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ளபோ.பவழங்குடியைச்சேர்ந்தவர்மணிராஜ். இவர்லாரிஓட்டுநர் ஆவார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன. தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக உள்ள தனது மனைவியைச் சந்தேகத்தின் பேரில்மணிராஜ்கடுமையாகத்துன்புறுத்தி வந்துள்ளார். மனமுடைந்த அந்த பெண், தனது இரண்டு குழந்தைகளுடன் தாய்வீட்டிற்குச்சென்றுவிட்டார்.

இந்த நிலையில், தனது மனைவியின் தாயார்வீட்டிற்குச்சென்றமணிராஜ்,மனைவியைச்சமாதானப்படுத்தி, தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அதைத் தொடர்ந்து, மனைவிக்குஉணவுகொடுக்காமல் துன்புறுத்தியமணிராஜ், மேலும் அவரின் உடல் முழுவதும் சூடு வைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளார்.

இதனால் ரத்தப்போக்கு ஏற்பட்ட அந்த பெண்ணுக்கு விருத்தாசலம் மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், இது குறித்து காவல்துறையினரிடம், அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல்துறையினர்மணிராஜ்மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.