Advertisment

இரண்டாவது மனைவி மீது சந்தேகப்பட்டு கொன்ற கணவர்! 

vHusband arrested in his wife passed away case

Advertisment

கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த பள்ள சங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால் (34). இவர் சொந்தமாக மாட்டு வண்டி வைத்து மண் அள்ளி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், இவர் மனைவியின் அக்காவான அம்பிகா (30), தனது கணவரை இழந்து வாழ்ந்து வந்துள்ளார். அவரை தனபால், முதல் மனைவியின் சம்மதத்துடன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி தெற்கு மேட்டுப்பட்டி கிராமத்தில் இரண்டாவது மனைவி அம்பிகாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரைஅடித்துக் கொலை செய்து புதைத்துள்ளார். அங்கிருந்து இரண்டு நாட்கள் தலைமறைவான அவர் நேற்று முன்தினம் வெள்ளியணை போலீசாரிடம் உண்மையை ஒப்புக்கொண்டு சரணடைந்துள்ளார். மூன்று நாட்கள் கழித்து நேற்று மனைவியின் பிரேதம் ஒரு குறிப்பிட்ட கிணற்றில் புதைத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பிரேதத்தை கைப்பற்ற சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து, தனபால் அடையாளம் காட்டிய இடத்திலிருந்து பிணம் தோண்டி எடுக்கப்பட்டது. அதேசமயம், தன்னை தன் கணவர் தனபால் கொலை செய்ய முயற்சிப்பதாக அவரின் முதல் மனைவி போலீஸில் புகார் கூறியுள்ளார்.

karur police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe