Advertisment

பிளேடால் அறுத்து மனைவி கொடூரக் கொலை; போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி

Husband anf wife Doubt ; Police investigation shocked

Advertisment

மனைவி கர்ப்பமடைந்ததில் சந்தேகமடைந்த கணவன் மனைவியை பிளேடால் கிழித்துக்கொலை செய்த சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சிதம்பரம் அருகே உள்ள கீழ் அணுவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (35) இவருக்கும் ரோஜா என்பவருக்கும் கடந்தமூன்று மாதங்களுக்கு முன்புபெற்றோர்கள் நிச்சயிக்கப்பட்டபடி திருமணம் நிகழ்ந்தது. திருமணமான ஆரம்பத்திலிருந்தே சிலம்பரசன் ரோஜாவுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

நான்கு மாத கர்ப்பமாக இருக்கும் மனைவி ரோஜா மீது சந்தேகமடைந்த சிலம்பரசன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சிலம்பரசன் பிளேடை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் படுகாயமடைந்த ரோஜா சம்பவ இடத்திலேயே ரத்தம் வெளியேறி துடிதுடித்து உயிரிழந்து போனார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் கிள்ளை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிரிழந்த ரோஜாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியைக் கொலை செய்தசிலம்பரசனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நிச்சயதார்த்தத்தின் பிறகு ரோஜா திருமணம் வேண்டாம் என என்னிடம் கூறியிருந்தார். அதேபோல் யாரோ ஒருவருடன் அடிக்கடி ரகசியமாக போனில் பேசி வந்தார். இந்த நேரத்தில் அவர் கர்ப்பமடைந்ததால் சந்தேகமடைந்து மனைவியை பிளேடால் அறுத்துக் கொன்றதாக ஒப்புக்கொண்டார்.

incident wife
இதையும் படியுங்கள்
Subscribe