/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1071.jpg)
புவனகிரி நகரத்திற்கு உட்பட்ட சின்ன தெருவில் வசிக்கும் கரிகாலன்(50), இவரது மனைவி பச்சையம்மாள் (43). கரிகாலன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து பச்சையம்மாள் அடிக்கடி அவரிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்படுவது வழக்கம்.
இந்த நிலையில், இன்று 12-ந் தேதி மாலை பச்சையம்மாள் இதுகுறித்து கரிகாலனிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் அதிகமாகி கரிகாலன், தன் மனைவி பச்சையம்மாளின் தலையில் கத்தியால் வெட்டியுள்ளார். வீட்டு வாசலில் ரத்தவெள்ளத்தில் கிடந்ததை பார்த்த அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், புவனகிரி காவல்துறையினருக்கு தகவல் கூறினார்கள். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட கரிகாலன் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவரை தேடிவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)