Advertisment

காதல் திருமணம்; இரண்டே மாதங்களில் முடிந்துபோன வாழ்க்கை!

Husband and wife  lost their life after having a love marriage in Thiruthuraipoondi

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆட்டூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்(23). இவர் நிதி நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் வேலையைச் செய்து வந்தார். இந்த நிலையில் இவரும், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே வசித்து வந்த ஹேமா(21) என்பவரும் காதலித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

Advertisment

இந்த நிலையில் நேற்று முன்தினம்(23.11.2024) இரவு பிரகாஷ் மற்றும் ஹேமா இருவரும் தூங்கியுள்ளனர். பின்னர் நேற்று காலை பிரகாஷ் கண் விழுத்து பார்க்கும் போது, வீட்டின் அறையில் ஹேமா தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பிரகாஷ் கத்தி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் ஹேமாவின் உடலை கயிற்றில் இருந்து கீழே இறக்கியுள்ளனர். அப்போது திடீரென ஹேமா தூக்கியில் தொங்கிய கயிற்றை எடுத்துக்கொண்டு அருகே உள்ள புளியமரத்தில் தூக்கிட்டு பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டர். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

Advertisment

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த ஜோடி 2 மாதங்களில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

police couple thiruthuraipoondi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe