/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/police-car_66.jpg)
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அப்பாபிள்ளை சந்தை பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன் சுவாமிநாதன் (34). சிதம்பரம்பாம்பன் கோயிலில் உதவியாளராகப் பணிபுரியும் இவர், வெள்ளிக்கிழமை காலை தூங்கிக் கொண்டிருந்த போதுஅவரது மனைவி, காய்கறி வெட்டும் கத்தியால் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். பிறகு அவர், சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வந்து சரணடைந்தார். படுகாயம் அடைந்தசுவாமிநாதன், சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து சுவாமிநாதனின் மனைவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸார் விசாரணையில், அடுத்த தெருவில் உள்ள சுவாமிநாதன் மனைவியின் சித்தியுடன்முறையற்ற தொடர்பு வைத்திருந்ததாகக் கூறியுள்ளார். மேலும், வீட்டிற்கு சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் மட்டும் வருவார். தன்னுடன் அவர் குடும்ப நடத்தவில்லை என்ற ஆத்திரத்தில் கத்தியால் சரமாரியாக குத்தியதாக போலீஸார் விசாரணையில் சுவாமிநாதனின் மனைவி தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)