தீ விபத்தில் கணவன், மனைவி உயிரிழப்பு!

MADURAI DISTRICT HUSBAND AND WIFE INCIDENT POLICE INVESTIGATION

ஆனையூர் அருகே இரவில் தூங்கிக்கொண்டிருக்கும்போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கணவன், மனைவி உயிரிழந்தனர்.

மதுரை மாவட்டம், ஆனையூர் அருகே உள்ள வீட்டில் வசித்துவருபவர் தொழிலதிபரான சக்தி கண்ணன் - சுபா தம்பதியினர். இவர்களின் வீடு இரண்டு தளங்களைக் கொண்டது. இதில் மேல் தளத்தில் உள்ள அறையில், நேற்று (08/10/2021) இரவு அந்த தம்பதி வழக்கம் போல் தூங்கிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை 04.00 மணியளவில் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து, தம்பதியினர் அறையிலிருந்து தப்பிப்பதற்காக, அந்த அறையின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு வெளியேற முயன்றனர். இருப்பினும், தீ மளமளவென அதிகளவில் பரவியதால், வெளியேற முடியாமல், அறையிலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதைத் தொடர்ந்து, தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை முழுவதுமாக அணைத்தனர். பின்னர், வீட்டிற்குள் சென்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையின் வீரர்கள், தம்பதியினரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், தீவிர விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், வீட்டின் அறையில் பொருத்தப்பட்டிருந்த ஏசியில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு கோணங்களிலும், அக்கம்பக்கத்தினரிடமும் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

Husband and wife incident madurai Police investigation
இதையும் படியுங்கள்
Subscribe