சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெயிண்ட் கடை மற்றும் குடோனுக்கு தீ வைக்கப்பட்டதில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.குடோனுக்குள் தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அங்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயணைப்புத் வீரர்கள் தண்ணீரைப் பீச்சி அடித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இது தொடர்பாக போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரித்ததில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக கடைக்கு தீ வைக்கப்பட்டு இருக்கலாம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.