Advertisment

மனைவியால் கணவனுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

தினமும் குடித்துவிட்டு வந்து சித்ரவதை செய்த கணவனை, கள்ளக்காதலன் உதவியுடன் ஆற்றில் தள்ளி கொலை செய்த மனைவியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி பகுதியில் ஏரி தெருவைச் சேர்ந்தவர் செல்வி. இவருக்கு வெங்கடேசன் என்பவரோடு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. வெங்கடேசன் மற்றும் செல்வி தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இதில் வெங்கடேசனுக்கு மது பழக்கம் இருந்துள்ளது. தினமும் மது குடித்துவிட்டு மனைவியோடு சண்டை போடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் மது குடித்து வருவதால் கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விசைத்தறி வேலை செய்து வரும் குமாரபாளையம் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவருடன் செல்விக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

அப்போது கணவன் வெங்கடேசன் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தன்னுடன் சண்டை போடுவதாக பெருமாளிடம் செல்வி கூறியுள்ளார். இதனை கேட்ட பெருமாள், வெங்கடேசனை கொலை செய்து விடலாம் என்று செல்வியிடம் கூறியுள்ளார். கணவனை கொலை செய்ய செல்வியும் சம்மதம் தெரிவித்ததால் கொலை செய்ய முடிவெடுத்துள்ளனர். இதனையடுத்து கடந்த 8ஆம் தேதி இரவு வெங்கடேசனுக்கு மது வாங்கிக் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அதிகளவு மது குடித்ததால் வெங்கடேசனுக்கு அதிக அளவு போதை எறியுள்ளது. பின்னர் குடிபோதையில் தன்னை மறந்து இருந்த வெங்கடேசனை காவேரி நகர் பகுதியில் உள்ள காவிரி ஆற்று பாலத்திற்கு அழைத்து சென்ற பெருமாள் அங்கிருந்து அவரை ஆற்றில் தள்ளி விட்டு கொலை செய்ததாக சொல்லப்படுகிறது. அதன் பின்பு வெங்கடேசனை கொலை செய்ததை வெளியில் சொல்லாமல் இருக்க செல்வியிடம் பலமுறை தகாத உறவை பெருமாள் வைத்துள்ளார்.

incident

மேலும் தினமும் உறவு வைக்க செல்வியை பெருமாள் கொடுமைப் படுத்தியுள்ளார். அவரும் பெருமாளுக்கு தேவைபடும் போதெல்லாம் உறவு வைத்துள்ளார். ஒரு கட்டத்தில் பெருமாள் செல்வியிடம் கட்டாயப்படுத்தி உறவு வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் மனமுடைந்த செல்வி அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் தனது கணவனை, கள்ளக்காதலன் பெருமாளுடன் சேர்ந்து கொலை செய்தோம் என்று ஒப்புக்கொண்டு சரணடைந்துள்ளார். பின்பு செல்வியிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுக்கொண்டு சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொலை வழக்கில் தலைமறைவாகி உள்ள பெருமாளை போலிஸார் தேடி வருகின்றனர். அதோடு கொலை செய்யப்பட்ட இடத்தில் வெங்கடேசன் உடல் உள்ளதா என்றும் தேடி வருகின்றனர். கணவனை கள்ளக்காதலன் உதவியோடு மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

family husband incident problem wife
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe