Advertisment

கணவனால் மனைவிக்கு நடந்த விபரீதம்... மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு!

நாகர்கோவில் அருகே பழவிலை இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த அகதிகள் முகாமில் இந்திராணி-ஜோன்ஜீனத் என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு மூன்று வயதில் மகன் ஒருவன் இருக்கிறார். இந்திராணியின் கணவர் ஜோன்ஜீனத்துக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை போட்டுள்ளனர். மேலும் மது அருந்தி விட்டு வந்து மனைவயின் மீது சந்தேகப் பட்டு அடித்து துன்புறுத்தி உள்ளார். இதனால் இந்திராணி மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார்.

Advertisment

incident

பின்பு கணவரிடம் மது குடித்துவிட்டு வர வேண்டாம் என்று ஜோதிமணி கூறியுள்ளார். பலமுறை கண்டித்தும் கணவர் திருந்தவில்லை. இதன் விளைவாக மன வேதனை அடைந்த இந்திராணி வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து இந்திராணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவர்களது உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், "இந்திராணியின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், அவருடைய கணவர் தான் அடித்து துன்புறுத்தி கொன்றுள்ளார் என்றும் கூறியுள்ளனர். மேலும் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக இந்திராணியை கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த புகார் குறித்து போலீஸார் விசாரிக்கவில்லை என்று உறவினர்கள் கூறிவருகின்றனர். அதோடு நாங்கள் கொடுக்கும் புகாரை ஏற்று அவரது கணவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறிவருகின்றனர்.

complaint police problem wife husband
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe