வேலூர் அருகே கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் நாட்றம்பள்ளி என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதிக்கு அருகே வெலக்கல்நத்தம் எனும் இடம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அமாவாசை என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகளின் பெயர் தமிழரசி. இவருக்கும், நாட்றம்பள்ளி அடுத்த அக்ராகரம் ஆச்சாரி வட்டத்தை சேர்ந்த வஜ்ஜிரம் மகன் சிங்காரவேல் என்பவருக்கும் கடந்த 2012-ம்வருடம் திருமணம் நடைபெற்றது. சிங்கார வேல் பாரதிதாசன் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.
இத்தம்பதியினருக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.இந்த தம்பதிகளுடன் சிங்காரவேலின் குடும்பத்தினரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். இந்த நிலையில், மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.இதையடுத்து சம்பவத்தன்று மாமியார் மருகள் இடையே தகராறு ஏற்பட்டதால், சிங்காரவேல் தமிழரசி வீட்டுக்கு தகவல் சொல்லி இரண்டு நாள் உங்கள் வீட்டுக்கு அழைத்து வருவதாக கூறி, தமிழரசியை அவரது அம்மா வீட்டில் கொண்டுபோய் விட்டுள்ளனார். நேற்று தமிழரசியின் தாயார் வெளியே சென்றிருந்தார். அப்போது தமிழரசி சிங்காரவேலு செல்போனில் அழைப்பு விடுத்துள்ளார். அப்போது பேசிய சிங்காரவேல் மனைவியை திட்டியதாக சொல்லப்படுகிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இதனால் மனமுடைந்து போன தமிழரசி யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழரசியின் பெற்றோர் அவர் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு பேரதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தமிழரசி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தமிழரசியின் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பின்பு உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாமியார் மருமகள் சண்டையால் இறந்தாரா இல்லை வேறு ஏதும் காரணமா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.