சென்னையில் குடும்பப் பிரச்சனையில் கணவனை கொதிக்கும் எண்ணையை ஊற்றி மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவிக நகரில் மூன்றாவது தெருவில் வசித்து வருபவர் உபயதுல்லா. இவருடைய மனைவி நஸ்ரின். கணவன், மனைவிக்குள் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு சண்டை போட்டதாக கூறுகின்றனர். இதே போல் கடந்த இரண்டாம் தேதியும் கணவன் மனைவிக்குள் சண்டை வந்துள்ளது. இந்த சண்டையின் போது கோபமான நஸ்ரின் ஒரு பாத்திரத்தில் எண்ணையை ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றியுள்ளார். அடுப்பில் இருந்த வெகு நேரமாக சூடேறியதால் எண்ணைய் கொதித்துள்ளது.

Advertisment

incident

nazrin

பிறகு சூடாக கொதித்த எண்ணையை எடுத்து உபயதுல்லா மீது ஊற்றியுள்ளார். மனைவி தன் மீது எண்ணையை ஊற்றியதை சற்றும் எதிர்பார்க்காத உபயதுல்லா அலறி துடித்து கத்தியுள்ளார். இவரது சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இவரை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உபயதுல்லா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த திருவிக நகர் போலீசார், உபயதுல்லா மனைவி நஸ்ரினை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கணவன் மனைவிக்குள் அடிக்கடி பிரச்னை ஏற்பட வேறு ஏதும் காரணம் உள்ளதா இல்லை மனைவியின் மீது அடிக்கடி சந்தேகப்பட்டு சண்டை நடந்ததா இல்லை வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருவதாக சொல்கின்றனர்.