Advertisment

வங்கி மேலாளரை ஏமாற்றிய கணவன், மனைவி; போலீசார் விசாரணை

husband and wife cheated bank manager taking loan

Advertisment

திருச்சி கண்டோன்மெண்ட் பாரதியார் சாலையைச் சேர்ந்த சரவணகுமார் (38) தனியார்வங்கியின் மூத்த மேலாளராக உள்ளார். முத்தரசநல்லூர் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி(31) மற்றும் அவரது கணவர் சையது காதர் பாட்ஷா (32) ஆகியஇருவரும் திருச்சி ஆர்.சி பள்ளி எதிரே உள்ள தனியார் வங்கிக் கிளையில்ரூ.19 லட்சம் கடன் கேட்டு விண்ணப்பம் செய்தனர். வங்கி மேலாளரானசரவணகுமார் 17 லட்சத்து 71 ஆயிரத்து 918 ரூபாய் கடன் தொகையை அவர்களுக்கு வழங்கி உள்ளார்.

இந்நிலையில், கணவன், மனைவி இருவரும் வீட்டு சொத்துஆவணங்களை அடமானம் வைக்காமல் திருச்சி விசாலாட்சி பகுதியை சேர்ந்த அஸ்லாம் என்பவருக்கு பவர் எழுதி கொடுத்து மேலாளர் சரவணகுமாரை ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து சரவணகுமார் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

police bank
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe