Advertisment

மருத்துவமனைக்கு அருகே நடமாடிய கணவன் மனைவி; கைது செய்த போலீஸ்!

Husband and wife arrested for selling lottery

Advertisment

தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனையைத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ஈரோடு டவுன் போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட மரப்பாலம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் அருகில் சந்தேகத்துக்கிட்டமாக நடமாடிய இருவரைப் பிடித்து விசாரித்தனர்.

போலீஸ் விசாரணையில், அவர்கள் ஈரோடு சொக்கலிங்கம் பிள்ளை வீதியைச் சேர்ந்த சண்முகம் (58), அவரது மனைவி வனிதாமணி (55) என்பது தெரியவந்தது. மேலும் இருவரும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 72 லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் ரூ. 640 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

arrested lottery police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe