Advertisment

அறிவுரை கூறி கணவர் எடுத்த முடிவு - மனைவி, உறவினர்கள் கதறல்

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வந்தவர் ராஜ் (வயது 33). சென்னை திருமுல்லைவாயலை அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் இவருக்கு மோகனப்பிரியா (31) என்ற மனைவி உள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணமானது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மோகனப்பிரியா கர்ப்பமடைந்தார். ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மோகனப்பிரியா கர்ப்பமடைந்ததால் ராஜ் மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். எனினும் சில நாட்களில் அந்த கரு கலைந்து விட்டது. இதனால் தம்பதியினர் இருவரும் பெரும் சோகத்தில் இருந்தனர்.

Advertisment

வயது குறைவுதான் ஒன்னும் பிரச்சனை இல்லை. குழந்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஆறுதல் கூறியுள்ளனர். இந்த நிலையில் ராஜ் கடந்த 26ஆம் தேதி காலை தனது மனைவி இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisment

வெளியில் சென்று இருந்த மோகனப்பிரியா வீட்டுக்கு வந்தபோது தனது கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கதறி அழுதார். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவல் அறிந்து வந்த போலீசார்ராஜின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராஜ் குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

cell

அப்போது தற்கொலைக்கு முன்னதாக ராஜ் தனது செல்போனில் மனைவிக்காக ஒரு வீடியோவை பதிவு செய்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் அவர், ‘‘உன்னை நான் ரொம்ப லவ் பண்றேன், உன்னை மிஸ் பண்றேன். மோகனா எனக்கு வாழவே பிடிக்கவில்லை. என்னால் நீ ரொம்ப கஷ்டப்படுற. நீ தற்கொலை செய்து கொள்ளாதே. தயவுசெய்து நீ வேற கல்யாணம் பண்ணிக்கோ. உனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கணும். நீ குழந்தையை பெற்று நல்லா வாழணும். உன்னை நெனைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு’’ என கூறி இருந்தார். இந்த வீடியோவை பார்த்து அவரது மனைவி கதறி அழுதார். உறவினர்களும் கதறினர்.

cell phone husband relatives wife
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe