Advertisment

சி.பி.சி.எல். நிர்வாகத்தைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம்!

The hunger struggle continues to condemn the CPCL administration

நாகப்பட்டினம் மாவட்டம் பனங்குடி என்ற கிராமத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல். (CPCL) அமைந்துள்ளது. இந்த நிறுவனம் 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கப் பணியை மேற்கொண்டுள்ளது. இதற்காக பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம், முட்டம், சிறுநங்கை உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் 620 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் சிபிசிஎல் நிறுவன விரிவாக்கப் பணிக்கான நில எடுப்பில் நிவாரணத் தொகை வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் கடந்த 10 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இதற்கிடையே நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. அதே சமயம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அளவீடு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. நாகை காவல் கண்கானிப்பாளர் அஸ்வின் தலைமையில் நாகை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட 800 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட எல்லையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

The hunger struggle continues to condemn the CPCL administration

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “பனங்குடி சி.பி.சி.எல். (CPCL) நில எடுப்பில் பாதிக்கப்பட்ட பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம் கிராம நில உரிமையாளர்கள், சாகுபடிதாரர்கள், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு மத்திய நில எடுப்பு சட்டம் 30/2013 - இன் படி வழங்க வேண்டிய R&R (மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பிட்டுத் இழப்பீட்டுத் தொகை) இழப்பீட்டுத் தொகையை நான்கு வருடங்களாக வழங்காமல் இருந்து வருவதை உடனடியாக வழங்கிட வேண்டும். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்கிய பின்னரே சி.பி.சி.எல்., ஐ.ஓ.சி.எல் (IOCL) நிறுவனம் நிலங்களை அளவீடு செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் துவங்க வேண்டும். மூன்று கிராமங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்குவதை உறுதி செய்திட வேண்டும்.

இந்த நில எடுப்பினால் பாதிக்கப்பட்ட முட்டம், சிறுநங்கை கிராமங்களின் விவசாய கூலித் தொழிலாளர் களையும் கணக்கெடுத்து, அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதை உறுதி செய்திட வேண்டும். பணங்குடி கிராமத்தில் சாகுபடிதாரர்கள், விவசாய கூலித் தொழிலாளர்கள் இவர்களின் கணக்கெடுப்பில் திட்டமிட்டே ஊழல் செய்யும் பனங்குடி கிராம நிர்வாக அலுவலர் சித்ரா என்பவர் மீது துறை ரீதியான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும்” என முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

police villagers people cpcl Nagapattinam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe