இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் அறையில் இருந்து கடந்த அக்டோபர் 18ந்தேதி, ஆன்ட்ராய்ட் செல்போன் கைப்பற்றினர். இதனால் அவரை தனிமை சிறைக்கு மாற்றினர். அவருக்கான சலுகைகள் அனைத்தும் சிறைத்துறை ரத்து செய்தது.

Advertisment

hunger strike by murugan

இதே வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனது கணவரை கொடுமைப்படுத்துவதாக கூறி வேலூர் பெண்கள் தனி சிறையில் உண்ணாவிரதம் இருந்தார்.

Advertisment

கடந்த அக்டோபர் 23ந்தேதி தொடங்கிய உண்ணாவிரதம் நவம்பர் 5ந்தேதி வரை தொடர்ந்தது. அதிகாரிகள் நளினி, முருகன் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதோடு சலுகைகள் சிலவற்றை மீண்டும் வழங்கினர். அதன்படி நளினி – முருகன் சந்திப்பு நடைபெற்றது.

இந்நிலையில் சிறைத்துறை கண்காணிப்பாளர் ஆண்டாளிடம், மனு தந்துள்ள முருகன், என்னை தனிமை சிறையில் இருந்து நான் ஏற்கனவே இருந்த அறைக்கு மாற்ற வேண்டும். தொடர்ச்சியாக கடவுளுக்குபூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்து நவம்பர் 11ந்தேதி முதல் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார் என்கிறது சிறைத்துறை காவலர்கள் வட்டாரம். இதனை சிறைத்துறை அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.

Advertisment

வரும் 14ந்தேதி முதல் ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு தந்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.