Skip to main content

நூறுநாள் திட்ட நிதியின் ஒரு பகுதியை நதிகள் இணைப்புக்கு பயன்படுத்தலாம் - விசுவநாதன் பேச்சு

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

நவீன நீர்வழிச்சாலை மற்றும் அனைத்து மக்கள் நல அறக்கட்டளை சார்பில் சென்னையில் கங்கா - குமரி தேசிய நீர்வழிச்சாலை திட்டம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் புத்தக வெளியீடு விழா நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு புத்தகத்தை வெளியிட்டபின் பேசிய விஐடி வேந்தர் விசுவநாதன் பேசும்போது, “அனைத்து நாட்டிற்கும் தண்ணீர் முக்கியம். ஆனால் நம் நாட்டில் தண்ணீர் தான் பெரும் பிரச்சனையாக உள்ளது. உலக மக்கள் தொகையில் இந்தியா 18 சதவீத மக்கள் தொகையை கொண்டுள்ளது. ஆனால், தூய்மையான நீர் 4 சதவீதம் மட்டும் தான் உள்ளது. இதுவே நிலத்தை எடுத்துக்கொண்டால் வெறும் 2.4 சதவ்ஈதம் தான் நமக்கு உண்டு.

 

viswanthan


நிலம், நீர் இவை இரண்டையும் நாம் பாதுகாக்க வேண்டும் இல்லையென்றால் நமக்கு பிரச்சனை தான். பல வருடங்களாக நாம் நதி நீர் பிரச்சனை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். 1967 பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும்போது, நான் அப்போதைய நீர்வழி துறை அமைச்சர் கே.எல்.ராவுடன் தென்னிந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசிக் கொண்டிருக்கையில் அமைச்சர், கங்கா நதிநீர் இணைப்பு பற்றி பேசிக்கொண்டிருந்தார். ஆனால் கோதாவரி - காவேரி நதிநீர் இணைப்பு சுலபம் தான், நதிநீர் இணைந்தால் தென்னிந்தியாவிற்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது என்றார். அந்த மாநிலத்தில் பாயும் நதி நீரை அம்மாநில தேவைக்கு போக மீதி இருக்கும் நீரை நாம் பிற மாநில நதியோடு இணைத்துவிடலாம். இவ்வாறு செய்வதால் எந்த வித பிர்ச்சனையும் வராது. யாரும் இதுக்கு எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டார்கள் என்றார். ஆனால், அப்போதைக்கு அதை செயல்படுத்த முடியவில்லை என்றார்.
 


மத்தியரசு ஆண்டு தோறும் ரூ. 28 இலட்சம் கோடிக்கு பட்ஜெட் போடுகிறது, இதில் ரூ. 1 இலட்சம் கோடியை நதி நீர் இணைப்புக்கு ஒதுக்கினால் 10 ஆண்டு காலத்திற்குள் நதி நீர் இணைப்பு திட்டத்தை நாம் செயல்படுத்திவிடலாம். நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்துக்கு அரசு ரூ. 5 இலட்சம் கோடி ஒதுக்கிறது. இதில் ஒரு பகுதியை நாம் நதி நீர் இணைப்பு திட்டத்துக்கு பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் விவாசயிகள் தற்கொலைகளை தடுக்கலாம். குடிநீர் பிரச்சனை காரணமாக மக்கள் சாலைக்கு வந்து போராடி கொண்டிருக்கிறார்கள் மறுபுறம் மழை பெய்யும்போது நீர் நிலைகளில் நீரை  தேக்காமல் விட்டுவிடுகிறோம். கோதாவரியில் மட்டும் ஆண்டுக்கு 2000 - 3000 டி.எம்.சி அளவுக்கு தண்ணீர் கடலில் கலக்கிறது சராசரியாக 1600 டி.எம்.சி என எடுத்துக் கொள்ளலாம். கிருஷ்ணா நதி நீருக்கு அதிகளவு பாய்ச்சல் நிலம் உள்ளது. அதே போல் விஜயவாடாவில் பிரகாசம் நீர் தேக்கம் உள்ளது. அதை சரிவர பராமரிக்காமல் தூர் வாராததால் வெள்ள பெருக்கு காலத்தில் நீர், கடலில் அதிகளவு கலந்துவிடுகிறது. மேற்கு பகுதியில் (கேரளா - கர்நாடகா) பாயும் ஆறுகளின் நீர் பெரும்பாலும் கடலில் தான் கலக்கிறது. 
 


சமீபத்தில் தமிழகத்தில் பெய்த மழையில் சுமார் 250 டி.எம்.சி அளவுக்கு தண்ணீர் கடலில் கலந்திருக்கிறது. தாமிரபரணி முதல் பாலாறு வரை நாம் நதி நீரை இணைக்க வேண்டும். தமிழகத்தில் சுமார் 40 ஆயிரம் ஏரிகள் உள்ளது. இவை அனைத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு நாம் பாதுகாப்பதால் ஏரிகளில் மட்டும் சுமார் 250 டி.எம்.சி அளவு தண்ணீரை சேமிக்க முடியும். அதை நாம் செய்யாமல் தண்ணீருக்காக நீதி மன்றத்தில் போராடி கொண்டிருக்கிறோம். இந்த நிலை விரைவில் மாற வேண்டும்.
 


மேட்டூர் அணையை சரியாக  தூர்வாரினால் நீர் சேமிக்கும் அளவை நாம் உயர்த்தலாம். தென்னை, கரும்புக்கு சொட்டு நீர் பாசன முறையில் நீர் பாய்ச்சினால் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை நீரை சேமிக்க முடியும். தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் இஸ்ரேல் நாடு சொட்டு நீர் பாசன முறையில் உலகளவில் முன்னோடியாக திகழ்கின்றது. சீனாவில் தண்ணீர் அளவு குறைவு ஆனால் உற்பத்தியில் முன்னணி வகிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு விரைவில் மத்தியில் அமையவிருக்கும் அரசு நதி நீர் இணைப்புக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஐடி பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
 threat to VIT University in vellore

வேலூர் காட்பாடி பகுதியில் உள்ளது விஐடி தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகம். 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பல்கலைக்கழகத்தில் சுமார் 30,000க்கும் மேற்பட்ட உள்நாட்டு - வெளிநாட்டு மாணவ - மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். லட்சக்கணக்கில் நன்கொடை, கட்டணம் செலுத்துபவர்கள் மட்டுமே இதில் பயில முடியும். நாட்டில் போபால், சென்னை உட்பட வேறு சில இடங்களிலும் வி.ஐ.டி கல்வி நிலையம் செயல்படுகிறது. வேலூர் பல்கலைக்கழகத்தின் மீது அரசு நீர் நிலை பகுதிகள் ஆக்கிரமிப்பு உட்பட சில குற்றச்சாட்டுகள், சர்ச்சைகள் உண்டு.

இந்நிலையில், வேலூர் விஐடி பல்கலைக்கழகத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. விஐடி பல்கலைக்கழகத்தின் இமெயிலுக்கு,  வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததாக விஐடி பல்கலைக்கழகத்தின் மூலம் வேலூர் மாவட்ட காவல்துறைக்கு இன்று மாலை புகார் அளிக்கப்பட்டது.

வேலூர் மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் தலைமையில் 10 பேர் கொண்ட ஆறு குழுக்கள், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட போலீசார் விஐடி பல்கலைக்கழகத்திற்கு விரைந்து சென்று பல்கலைக்கழகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறனர். போலீசார் மற்றும் பல்கலைக்கழகத்தின் தரப்பில் மாணவர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் கூறி வருகிறனர். சோதனையானது தொடர்ந்து நடந்து வருகிறது.

Next Story

கருப்புக் கொடி ஆர்பாட்டம் - வேலூர் மாவட்ட திமுக அறிவிப்பு

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

நவம்பர் 18 ஆம் தேதி தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நடைபெற்ற அனைத்து மண்டலங்களுக்கான மகளிர்  விளையாட்டு போட்டியின் பரிசளிப்பு மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சி வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக கல்லூரியில் நடைபெற இருக்கிறது.

strike to be held in VIT campus by dmk

அதற்கான அழைப்பிதளில் அந்த பகுதி காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது என்பதால் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் சட்டமன்ற எதிர்க் கட்சித் துணை தலைவர் துரைமுருகன் எம்.எல்.ஏ பெயரும், அந்த தொகுதியின் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஜெகத்ரட்சகன் எம்.பி பெயரையும், வேலூர் மாவட்டத்தை சார்ந்த திமுக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயரை அதற்கான விழா அழைப்பிதழில் திட்டமிட்டு புறக்கணித்து விழாவை நடத்த திட்டமிட்டு  இருக்கிறார்கள்.

 

இதில் அதிமுகவில் இருக்கும் சம்மந்தப்பட்ட துறை  அமைச்சர்கள் மற்றும் மாவட்ட அதிமுக  சட்டமன்ற உறுப்பினர்கள் பெயர்களை மட்டுமே அழைபிதழில் அச்சிட்டு, விழா நடத்துவது மட்டுமல்ல இப்படிப்பட்ட அரசு விழவை ஒரு தனியார் கல்லூரியில் நடத்துவதே தவறான செயல். ஆகவே அதிமுக அரசின் இத்தகைய செயலை வேலூர் மாவட்ட திமுக வன்மையாக  கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், திமுக தலைமை கழக அனுமதியுடன் அன்றைய தினம் 18-11-2019 அன்று காலை வி.ஐ.டி கல்லூரி வளாக நுழைவு வாயில் முன்பு கருப்புக் கொடி ஆர்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது.