ஆதரவற்றவர்களை தேடித்தேடி உதவும் காவல்துறை...

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் தோல் கையுறை தயாரிக்கும் பணியில், ஒரு தனியார் நிறுவனத்தில் 77 பேர் பணியாற்றி வந்தனர். தற்போது நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அந்த தொழிலாளர்களால் சொந்த மாநிலத்துக்கும் செல்ல முடியவில்லை. இதனால் அவர்களை மாவட்ட நிர்வாகம் தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்துள்ளது. இந்நிலையில்,அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களான மளிகை பொருட்கள் பெறுவதில் பெரும் சிரமமம் ஏற்பட்டுள்ளது.

humanistic incident in thirupathur

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதுபற்றிய தகவல் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மருத்துவர். விஜயகுமார் கவனத்துக்கு சென்றதும், உடனடியாக அத்தியாவசிய பொருட்களை தயார் செய்து அதனை அவர்களிடம்ஒப்படைத்தார். அதேபோல் சரணாலயம் என்கிற கருணை இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் தேவையான அரிசி, பழங்கள், பிஸ்கட் உட்பட அத்தியாவசிய பொருட்களை வழங்கி அவர்களின் பசிகளை போக்கினார்.

humanistic incident in thirupathur

இப்படி ஆதரவற்றவர்கள் யாராவது திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்தால் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள் என காவல்துறையினருக்கு உத்தரவிட அதன்படி அவர்களும் சாலையோரங்களில் சுற்றி திரியும் ஆதரவற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தேடித்தேடி உணவு உட்பட அத்தியாவசிய பொருட்களை தந்து காப்பாற்றி வருகின்றனர்.

corona virus humanity police thirupathur
இதையும் படியுங்கள்
Subscribe