Human Waste in School Lock; Cruelty to say the least

திருவள்ளூரில் பள்ளிக்கூடம் ஒன்றில் பூட்டில் மனித கழிவுகள் பூசப்பட்ட நிலையில் பள்ளிக்கூடத்தின் உடைமைகளும் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருவள்ளூரில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள மத்தூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இதில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர். இன்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்து வகுப்பறையின் கதவுகளை திறக்க முயன்ற பொழுது வகுப்பறையின் பூட்டில் மனிதக் கழிவு பூசப்பட்டிருந்தது. உடனடியாக இது குறித்து மாணவர்கள் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

Advertisment

 Human Waste in School Lock; inhumanity to say the least

உடனடியாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர். அங்கிருந்த பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளிக்கு முன்பாக அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து போலீஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், போலீசாரும்இந்த கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டது யார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.