Skip to main content

பள்ளி சமையல் அறையில் மனிதக் கழிவு; தொடரும் அவலங்கள்

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

N

 

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து அண்மையில் திருவள்ளூரில் பள்ளிக் கட்டிடத்தில் பூட்டுகளில் மனித கழிவு பூசப்பட்டது மற்றொரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மேட்டூரில் பள்ளியில் உணவு தயாரிக்கும் கட்டிடத்தில் மனிதக் கழிவு பூசப்பட்ட சம்பவம் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

மேட்டூரில் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காவேரிபுரம் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 1958 ஆம் ஆண்டு காமராஜர் நேரில் வந்து இந்த பள்ளியை திறந்து வைத்துள்ளார். அந்த அளவிற்கு பாரம்பரியம் மிக்க பழமை வாய்ந்த இந்த பள்ளியில் சுற்றுச்சுவர் மற்றும் காவல் பாதுகாப்பு இல்லாதது அந்தப்பகுதி மக்களின் பெரும் குறையாக இருந்து வருகிறது.

 

இதனைப் பயன்படுத்தி சில குடிமகன்கள் பள்ளி வளாகத்திலேயே மது அருந்திவிட்டு பாட்டில்களை தூக்கிச் வீசும் அவலங்களும் இதற்கு முன்னே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மர்ம நபர்கள் சிலர் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்திற்கான சத்துணவு கூடத்தின் சுவரில் மனிதக் கழிவுகளை பூசி விட்டுச் சென்றுள்ளனர்.

 

human waste in the school kitchen; Ongoing woes

 

இன்று காலை பள்ளிக்கு வந்த ஊழியர்கள் மாணவர்களுக்காக உணவு சமைக்க சென்ற பொழுது இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியருக்கும், கல்வி மேலாண்மை குழுவிற்கும் தகவல் கொடுத்துள்ளனர். அதன் பின்னர் காவல் துறைக்கு புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை, சுவரில் ஒட்டி இருந்த மனிதக் கழிவுகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊடகங்களில் இது தொடர்பான செய்திகள் வெளியான நிலையில் மேட்டூர் கோட்டாட்சியர், மேட்டூர் காவல்துறையினர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் என அனைவரும் ஒரே நேரத்தில் வந்து குவிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

"வேங்கை வயல் உட்பட எந்த வாக்குப்பதிவு மையத்திலும் மறு வாக்குப்பதிவு இல்லை" - திருச்சி ஆட்சியர்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Trichy Collector says There is no re-voting in any polling center

தமிழகத்தில் நேற்று ஒரே கட்டமாக 18 -வது நாடாளுமன்ற தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணிக்கு முடிவுற்றது. இதனை தொடர்ந்து வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட் மின்னணு வாக்கு இயந்திரங்கள், விவி பேட் சீல் வைக்கப்பட்டு வாக்குச்சாவடியில் இருந்துவாக்கு எண்ணிக்கை மையமான ஜமால் முகமது கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, கட்டுப்பாட்டு இயந்திர அறையில் வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு தேர்தல் பொது பார்வையாளர் தினேஷ்குமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரதீப்குமார்  வாக்குப்பட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையை அடைத்து அனைத்து கட்சியினர் முன்னிலையிலும் சீல் வைக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரதீப்குமார் கூறியதாவது:-ஒவ்வொரு வாக்கு சாவடிகயிலிருந்தும் வாக்கு இயந்திரங்கள் நேற்று ஜமால் முகமது கல்லூரியில் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 67.42% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து இருந்தால் கண்டிப்பாக இன்னும் வாக்கு சதவீதம் உயர்ந்திருக்கும். நகர்ப்புற பகுதிகளில் வாக்கு சதவீதம் குறைவாகத்தான் உள்ளது.

நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சில கோளாறுகள் காரணமாக விவிபேட் மட்டும் கட்டுப்பாட்டு கருவிகள் மாற்றம் செய்யப்பட்டது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில்  விதிமீறல்கள் தொடர்பாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த நேரத்தில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 5.8 கோடி , தங்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் 8.6 கோடி வரை பறிமுதல் செய்துள்ளோம். அனைத்திற்கும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானவரித்துறையினர் அதற்கான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

மூன்றடுக்கு பாதுகாப்பு பணி இங்கு போடப்பட்டுள்ளது. இதில் ஒரு அடுக்கில் துணை ராணுவ கம்பெனியை சேர்ந்தவர்கள் இருப்பார்கள். 24 மணி நேரமும் சிசிடிவி கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு நாளில் சில நிறுவனங்கள் செயல்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக ட்விட்டரில் கூட நமக்கு ஒரு புகார் வந்திருந்தது. உடனடியாக அந்த நிறுவனத்தை அணுகி விடுமுறை விட சொல்லி ஏற்பாடு செய்தோம். திருச்சி மக்களவைத் தொகுதியில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் உட்பட, எந்த வாக்கு பதிவு மையத்திலும் மறுவாக்குப் பதிவு இல்லை. திருச்சி மக்களவைத் தொகுதியில், 67.42 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இவ்வாறு திருச்சி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.