Advertisment

மனித உரிமை ஆர்வலர் கொலை வழக்கு; அதிமுக பிரமுகர் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை

Human rights activist's case. 8 people including ADMK leader sentenced to life imprisonment

திருவண்ணாமலை நகரகிரிவலப்பாதையில் வசித்து வந்தவர்ராஜ்மோகன் சந்திரா. மனித உரிமை விவகாரங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

Advertisment

கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மனித உரிமை மீறல் மற்றும் நில அபகரிப்பு வழக்கில் சட்டப் போராட்டம் நடத்திய ராஜ்மோகன் சந்திராவை கிரிவலப்பாதையில் வைத்து சிலர் வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த கொலை அப்போது நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அதிமுக ஆட்சி என்பதால் காவல்துறை மெத்தனமாகச் செயல்படுவதாக குற்றம் சாட்டி சிபிஎம் கட்சி மாநில அளவில் போராட்டம் நடத்தியது. திருவண்ணாமலையில் கண்டனக் கூட்டங்களும் நடைபெற்றன.

Advertisment

அதன்பின், இந்த வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் A1 வெங்கடேசன் தந்தை பெயர் வீராசாமி, A2 செல்வம் தந்தை பெயர் வீராசாமி (இறந்துவிட்டார்), A3 காசி என்கிற வீராசாமி தந்தை பெயர் கண்ண கவுண்டர் (இறந்துவிட்டார்), A4 மீனாட்சி கணவர் பெயர் செல்வம், A 5 முருகன் தந்தை பெயர் தனபால், A6 சந்திரசேகர் தந்தை பெயர் மகாசாமி, A7 ஐயப்பன் தந்தை பெயர் சிவசங்கரன், A8 விஜயராஜ் தந்தை பெயர் மண்ணாங்கட்டி, A9 சடையன் தந்தை பெயர் சப்ப காலன், A10 சுப்பிரமணி தந்தை பெயர் முனியன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக திருவண்ணாமலை நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று 2023 ஜனவரி 23 ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் வழக்கு நடந்தபோதே இறந்த இருவர் தவிர்த்து மற்ற 8 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். தண்டனை வழங்கப்பட்டதும் நீதிமன்றத்திலிருந்த 8 பேரையும் போலீசார் கைது செய்து வேலூர் மத்தியச் சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

police admk thiruvannamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe