Advertisment

மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்பு - தமிமுன் அன்சாரி அறிவிப்பு

மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிரான மனித சங்கிலி போராட்டத்தில் மஜக பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரி எம்எல்ஏ கூறியுள்ளார்.

Advertisment

 THAMIMUN ANSARI

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காவிரி டெல்டா மாவட்டங்களையும் தாண்டி, தமிழக கடலோரங்களை கபளீகரம் செய்யும் வகையில் மீத்தேன் - ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பல பேரழிவு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த திட்டமிட்டு வருகிறது.

மண்ணுரிமையையும், சுற்றுச்சூழலையும் காப்பாற்றும் வகையில் பொதுமக்கள் கொதித்து எழுந்துள்ளதை ஏனோ அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.

Advertisment

இந்நிலையில், நிலைமை கைமீறி போவதை தடுக்க வேண்டிய நிலை அவசர - அவசியமாக உருவாகியுள்ளது.

எதிர்வரும் ஜூன் 12 அன்று, பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் மற்றும் விவசாய அமைப்புகள் இணைந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரை மனித சங்கிலி போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதை மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்கிறது.

மேலும் இப்போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவிப்பதுடன் , இதில் மஜகவினர் திரளாக பங்கேற்பார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்போராட்டத்திற்கு அனைத்து தரப்பும் ஆதரவு வழங்கி , நமது மண்ணுரிமையை பாதுகாக்க களம் காண வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

THAMIMUN ANSARI methane hydrocarbon struggle Human Chain
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe