Advertisment

சமீப காலமாக வட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களாகவும், வியாபாரிகளாகவும் தொடர்ந்து தமிழகத்திற்கு வட மாநிலத்தவர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வட மாநில வியாபாரிகள் அதிக அளவில் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் தமிழகவியாபாரிகள்தொழில் ரீதியாகப்பெருமளவில் பாதிக்கப்படுவதாகக்கூறி இதனைக் கண்டித்து சென்னை வண்ணாரப்பேட்டை சுற்றுவட்டார வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில் இன்று (14.01.2023) காலை 10 மணி அளவில் மனிதச் சங்கிலி பேரணியில் ஈடுபட்டனர்.