சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறுகட்சிகளின் சார்பாக மனித சங்கிலி ஊர்வலம் நடத்த விசிக சார்பில் ஏற்பாடு செய்தநிலையில், இன்று பல்வேறு இடங்களில் மனித சங்கிலி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு அருகே நடைபெற்ற மனித சங்கிலி நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன், மதிமுகவின் வைகோ, மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர்ஜவாஹிருல்லா ஆகியோர் பங்கேற்றனர். தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட பல இடங்களில் இந்த மனித சங்கிலி நிகழ்வானது நடைபெற்று வருகிறது. மொத்தமாக 17 கட்சிகள்,44 இயக்கங்கள் இந்த மனித சங்கிலி நிகழ்வில்பங்கேற்றுள்ளன.
விசிக முன்னெடுத்த மனித சங்கிலி... 17 கட்சிகள் பங்கேற்பு
Advertisment