Advertisment

கைக்குழந்தையுடன் களமிறங்கிய தாய்மார்கள்..! மாபெரும் மனித சங்கிலி போராட்டம். (படங்கள்)

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. சென்னையில் பல்வேறு அமைப்புகள் சார்பாக போராட்டங்கள் நடந்து வருகிறன. நேற்றைய தினம் (30.01.2020) தமிழக மக்கள் ஒற்றுமை மேடை இயக்கத்தின் சார்பாக மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. திருவெற்றியூரிலிருந்து தாம்பரம் வரை நீண்ட இந்த மனித சங்கிலி போராட்டத்தில் பொதுமக்களும் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகளின் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். சைதாப்பேட்டை பகுதியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும், அண்ணாசாலை பகுதியில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் க.உதயகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ‘இந்து’ குழுமத்தின் தலைவர் இந்து என்.ராம், ஆகியோரும் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Advertisment

Human Chain protest caa
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe